KP Astrology Software - Latest Version (Tamil & English)

சார ஜோதிட மென்பொருளில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களின் தொகுப்பு 



இந்த மென்பொருளின் செயல்முறை விளக்கங்கள் YouTube-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. கீழ்கண்ட link வாயிலாக அன்பர்கள் அதை காணலாம்.








#1. GRAPH INDICATOR (For Planet & Bhava Strength)
கிரக மற்றும் பாவ வலிமையை மிகச் சுலபமாக அறியும் வசதி:
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த அளவிற்கு வலிமையாக உள்ளது என்பதை கண்டுபிடித்தாலே போதும். அந்த கிரகம் ஜாதகருக்கு என்ன செய்யும் என்பதை கணித்து விடலாம். சார ஜோதிட முறையை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் வலிமை என்பது மேற்சொன்ன கிரகம் தான் நின்ற நட்சத்திர மற்றும் உபநட்சத்திர வாயிலாக தொடர்பு பெறும் பாவங்களே ஆகும்.

ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த அளவிற்கு வலிமையாக உள்ளது மற்றும் அந்த கிரகம் ஜாதகருக்கு என்ன மாதிரியான பலனை தரும், என்பதை ஆரம்ப நிலை ஜோதிட அன்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மிக எளிதில் தெரியப்படுத்தும் விதமாக கிரகத்தின் வலிமையை அகவாழ்க்கை, புறவாழ்க்கை என தனித்தனியாக மதிப்பெண்களுடன் கூடிய (BAR DIAGRAM) வரைப்படத்தில் மென்பொருளே காண்பிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த அளவிற்கு மதிப்பெண்களை பெறுகின்றதோ அந்த அளவிற்கு மேற்குறிப்பிட்ட கிரகம் சாதகமாக இருந்து நன்மையை செய்யும்.

உதாரணத்திற்கு..
ஒரு கிரகம் 0% மதிப்பெண்களை பெற்றால் அந்த கிரகத்தால் ஜாதகருக்கு சிறிது கூட நன்மை இருக்காது. மாறாக கெடு பலன்களே ஏற்படும். அதே போல் ஒரு கிரகம் 100% மதிப்பெண்களை பெற்றால் அந்த கிரகத்தால் ஜாதகருக்கு அதீத நன்மை உண்டு. அந்த கிரகத்தின் வாயிலாக கெடு பலன்கள் ஏதும் ஏற்படாது.

அதே போல் ஒவ்வொரு பாவத்திற்கும் அகம் புறம் என தனித்தனியே கிராப் (graph) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு ஜாதகத்திற்கு கிரக மற்றும் பாவத் தொடர்புகளை பார்க்காமலேயே வெறும் இந்த Graph Indicator-ஐ மட்டும் பார்த்து மிக எளிதாக பலன் கூற முடியும்.

உதாரணத்திற்கு..
ஒரு ஜாதகத்தில் ராகுபகவான் 8-ம் பாவத்தை தொடர்பு கொள்வதாக வைத்து கொள்ளுங்கள். அந்த ஜாதகருக்கு ராகு பகவான் அகம், புறம் என இரண்டு வகையான காரகங்களுக்கும் மிக மோசமான பலனையே தருவார். சிறிது கூட நன்மையை செய்ய மாட்டார். ஆதலால் ராகுபகவான் இந்த ஜாதகப்படி 0% மதிப்பெண்களையே பெற்று இருப்பார். Graph-ல் இந்த 0% மதிப்பெண்கள் என்பது Bar Diagram மூலம் காண்பிக்கப்பட்டிருக்கும்.

நாம் இந்த ஜாதகத்தில் பாவ தொடர்பை பார்த்தால், ராகு பகவான் 8-ம் பாவத்தை தொடர்பு பெற்று ஜாதகர் என்னும் லக்னத்தையே கெடுப்பதால் ராகு பகவானால் எந்த பிரயோஜனமும் இல்லை; பிரச்சனை தான் ஏற்படும் சொல்லலாம். அதே போல் Graph-ல் ராகு பகவான் 0% மதிப்பெண்கள் பெற்று இருப்பதால் ராகு பகவானால் சிறிது கூட நன்மை இல்லை; தீய பலன்கள் தான் ஏற்படும் என்று சொல்லி விட முடியும்.

ஒற்றை பாவங்கள், கூட்டு பாவங்கள் என அனைத்து வகையான பாவத் தொடர்புகளுக்கும் அகவாழ்க்கைக்கு மற்றும் புற வாழ்க்கைக்கு என தனித்தனியே அதற்கான மதிப்பெண்கள் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டு மென்பொருளில் feed செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.







#2. MARRIAGE MATCHING
திருமண பொருத்தம்
(i) பாரம்பரிய முறையில் பின்பற்றப்படும் லக்ன பொருத்தம், ராசி பொருத்தம், நட்சத்திர பொருத்தம் ஆகியவைகளை எவ்வித சிரமமும் இல்லாமல் துல்லியமாக அறியும் வசதி.

(ii) அது மட்டுமல்லாமல் சார ஜோதிட முறையில் மிக துல்லியமாக திருமண பொருத்தம் பார்க்கும் வசதி.

அதாவது திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கும் 7-ம் பாவம், களத்திர காரகன், ஜாதகத்தின் தலைமை பீடமான லக்ன பாவம், தெய்வ பாவமான 9-ம் பாவம், நடப்பு தசாநாதன், நடப்பு புத்திநாதன் ஆகியவைகளின் கொடுப்பினைகளை ஆராய்ந்து அவைகள் திருமண வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு சாதகமாக (வலிமையாக) உள்ளன என்பதை மதிப்பெண்களை கொண்டு மென்பொருளே காண்பிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக ஒரு ஜாதகத்திற்கு 200 மதிப்பெண்கள் என தொகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஜாதகர் பெறும் மதிப்பெண்களை வைத்து அவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அந்த குறிப்பிட்ட ஜாதகரை எந்த மாதிரியான ஜாதகத்துடன் இணைக்கலாம் என்பதையும் எவ்வித குழப்பமும் இன்றி நாம் மிக எளிதாக தீர்மானிக்க முடியும்.

மென்பொருளில் இந்த திருமண பொருத்த ரிப்போட்டையும் (Marriage Matching Report) PDF வடிவில் சேமித்து Print எடுக்க முடியும்.




#3. HORARY PREDICTION
பிரசன்னம் பார்க்கும் வசதி:
ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஜாதகம் ஏதும் இல்லை என்று கூறி ஜோதிட ரீதியாக பலன் சொல்லுங்கள் என்று கூறுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் பிரசன்ன ஜோதிடம் என்பது இன்றியமையாதது ஆகும். பிரசன்ன ஜாதகத்தையும் இதே மென்பொருளில் மிக எளிதாக கணிக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.



#4. DETAILED TRANSIT PREDICTIONS
கோச்சார பலன் பார்க்கும் வசதி..விதி, மதி, கதி சேர்ந்ததே ஜோதிடம் ஆகும். இதில் கதி என்கிற கோச்சாரம் என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும், சிறிது அளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அரங்கேறும் சம்பவங்களுக்கு கோச்சார பலன் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஒரு தனிமனிதனின் ஜாதகத்திற்கு இந்த மென்பொருளில் உள்ள Day Analysis OPTION மூலம் சுருக்கமாகவும், Transit Analysis OPTION மூலம் விரிவாகவும் கோச்சார பலன்களை நொடியில் அறிந்து கொள்ள முடியும்.


#5. MARRIAGE BIO-DATA
முன்பெல்லாம் வரன் பார்த்து திருமணம் செய்வது மிகச் சுலபமாக இருந்தது. காரணம் சொந்த பந்தங்களுக்கு உள்ளேயே வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது சொந்தக்காரர்கள் அல்லது நலம் விரும்பிகள் மூலமாக வரன்களை சுலபமாக அமைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

ஆனால் இன்றோ திருமணத்திற்கு வரன் பார்ப்பது என்பது மிகக் கடினமாக உள்ளது. திருமண தகவல் மையங்கள் பல பெருகி வருவதே இதற்கு சாட்சி.

பெரும்பாலான திருமண தகவல் மையங்கள் MARRIAGE BIO-DATA என்ற ஒரு படிவத்தை பின்பற்றி வருவது நாம் அனைவரும் அறிவோம். அந்த MARRIAGE BIO-DATA படிவத்தை இந்த சார ஜோதிட மென்பொருளில் மிகச் சுலபமாக Prepare செய்து Print எடுக்கும் வசதி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Marriage Bio-data ல்
ஜாதகரின் ஜாதகம், 
ஜாதகரின் பெயர், 
ஜாதகரின் வயது, 
ஜாதகரின் உயரம் மற்றும் எடை
ஜாதகரின் தோற்றம், 
ஜாதகரின் தந்தை பெயர், 
ஜாதகரின் தாயார் பெயர், 
ஜாதகரின் சகோதர சகோதரி விபரங்கள், 
ஜாதகரின் படிப்பு, 
ஜாதகரின் உத்தியோகம்/தொழில் 
ஜாதகரின் மதம் மற்றும் இதர விபரங்கள் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.



#6. BASIC NUMEROLOGY
அடிப்படை எண்கணிதம் பார்க்கும் வசதி.


#7. PLACE RP
கிரகங்கள் யாவும் சூரியனின் ஒளியை உள்வாங்கி தன்னுள் உள்ள தாதுப் பொருட்கள் மற்றும் அதனின் நிறம், தட்ப வெப்ப நிலைகள் போன்றவற்றை ஆதாரமாக கொண்டு ஒரு விதமான கதிர்வீச்சினை நாம் வாழும் இந்த பூமியில் செலுத்தி மனிதர்களாகிய நம்மை ஆளுமை செய்கின்றன.

இந்த கதிர்வீச்சுக்களின் அளவு மற்றும் தன்மை என்பது இடத்திற்கு தகுந்தவாறு வேறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சில கிரகங்களின் தாக்கம் என்பது இயல்பான அளவை விட சற்று கூடுதலான அளவில் காணப்படும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்தெந்த கிரகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை இந்த PLACE RP வசதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் இந்த PLACE RP வசதி என்பது எப்படி கணிதம் செய்யப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த PLACE RP வசதியில் நாம் ஒரு இடத்தை குறிப்பிட்டால் அந்த இடத்திற்குரிய அட்சாம்சம், ரேகாம்சத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த இடத்தை ஆளக்கூடிய கிரகங்களின் பட்டியல் ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி, உபநட்சத்திர அதிபதி, உபஉபநட்சத்திர அதிபதி, உபஉபஉபநட்சத்திர அதிபதி என்ற வரிசையில் அட்சாம்சம், ரேகாம்சம் என இரண்டிற்கும் தனித்தனியே வரும்.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, அதன் அட்சாம்சம் நிலையில் உள்ள உபஉபநட்சத்திர அதிபதியும், ரேகாம்சம் நிலையில் உள்ள உபஉபநட்சத்திர அதிபதியும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

பன்னிரு ராசிகளில் ஒரு ராசி என்பது இந்திய நாடு என்று கற்பனை செய்தோமானால் அந்த ராசியில் உள்ள நட்சத்திரங்கள் என்பது இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு ஒப்பானது என்றும்; ஒரு நட்சத்திரத்தின் உட்பிரிவுகளான உபநட்சத்திரங்கள் என்பது அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ஒப்பானது என்றும்; உபநட்சத்திரத்தின் உட்பிரிவுகளான உபஉபநட்சத்திரங்கள் என்பது அந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு ஒப்பானது என்றும் கூறுவார்.

ஆக ஒரு குறிப்பிட்ட இடத்தை (ஊர்), அந்த இடத்திற்குரிய அட்சாம்சம் மற்றும் ரேகாம்சம் நிலைகளில் உள்ள உபஉபநட்சத்திர அதிபதிகளே மிக வலிமையாக ஆளுமை செய்கின்றன.

சரி, இந்த PLACE RP வசதியின் பயன்பாடு தான் என்ன?? எதற்காக இந்த வசதி மென்பொருளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற கேள்விகள் இப்போது உங்கள் மனதில் தோன்றலாம்..

கிரகங்கள் யாவும் எல்லாம் வல்ல இறைவனின் கட்டளையை பெற்று கொண்டு, பின்னர் தன் கதிர்வீச்சுக்களின் மூலமாகவே பூமியில் வாழும் நம்மை ஆளுமை செய்கின்றன.

ஒவ்வொரு ஜாதகத்திலும் (அகமோ அல்லது புறமோ) ஒரு சில கிரகங்கள் ஜாதகருக்கு நன்மை பயக்கும் கிரகங்களாகவும், ஒரு சில கிரகங்கள் ஜாதகருக்கு தீமை பயக்கக்கூடிய கிரகங்களாகவும் அமைகின்றன. நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் தன் கதிர்வீச்சினால் ஜாதகருக்கு நன்மையையும்; தீமை பயக்கக்கூடிய கிரகங்கள் தன் கதிர்வீச்சினால் ஜாதகருக்கு தீமையையும் செய்கின்றன.

மேலே ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட சில இடங்களை ஆளுமை செய்கின்றன என்று கூறியிருந்தேன். அதாவது ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட சில இடங்களில் தன் கதிர்வீச்சினை மிக அதிகளவில் செலுத்துகின்றன என சிறுவன் கூறியிருந்தேன்.

ஒரு கிரகம் இயல்பான அளவை விட சற்று கூடுதலாக கதிர்வீச்சுக்களை நம்மீது செலுத்தினால். அந்த கிரகத்தின் தாக்கம் நம்மீது இயல்பான அளவை விட சற்று கூடுதலாக காணப்படும். அப்படி இயல்பான அளவை விட சற்று கூடுதலாக கதிர்வீச்சுக்களை செலுத்தும் கிரகம் ஒருவரது ஜாதகப்படி நன்மை பயக்கக்கூடிய கிரகமாக இருந்தால் அந்த கிரகத்தின் வாயிலாக இயல்பான அளவை விட சற்று கூடுதலான நன்மையை அந்த ஜாதகர் பெற முடியும்.

ஒரு வேளை அப்படி இயல்பான அளவை விட சற்று கூடுதலாக கதிர்வீச்சுக்களை செலுத்தும் கிரகம் ஒருவரது ஜாதகப்படி தீமை பயக்கக்கூடிய கிரகமாக இருந்தால் அந்த கிரகத்தின் வாயிலாக இயல்பான அளவை விட சற்று கூடுதலான தீமையை அந்த ஜாதகர் பெற வேண்டும்.

ஆக நம் ஜாதகப்படி நன்மை பயக்கக்கூடிய கிரகங்கள் ஆளுமை செய்கின்ற இடங்களில் வசிப்பது, உத்தியோகம் பார்ப்பது, தொழில் புரிவது போன்றவை சிறப்பான பலன்களை அள்ளி தரும்.

உதாரணத்திற்கு.. 
இன்று மருத்துவம், பொறியியல் போன்ற உயர்நிலைக் கல்வியை பயில கலந்தாய்வு (Counselling) மிகவும் அவசியமானதாகும். கலந்தாய்வின் போது எந்த துறையை தேர்வு செய்வது என்பது ஒருபுறமிருக்க எந்த கல்லூரியை தேர்வு செய்வது என்ற குழப்பம் இன்று பெரும்பாலான மாணவ மாணவிகளிடமும் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் காணப்படுகின்றன. அதாவது வாடிக்கையாளர் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மூன்று இடங்களில் உள்ள மூன்று முக்கிய கல்லூரிகளை தேர்வு செய்திருப்பதாகவும் அவற்றில் எது சிறப்பான தேர்வாக இருக்கும் எனக் கேட்பதாகவும் வைத்துக் கொள்வோம்.

முதலில் மென்பொருளில் #PLACE_RP OPTION க்கு சென்று அந்த மூன்று கல்லூரிகள் அமைந்துள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களை ஆள்கின்ற கிரகங்களின் பட்டியலை குறித்து கொள்ள வேண்டும். அப்படி குறித்து வைத்த கிரகங்களில் எந்த கிரகம் ஜாதகரின் ஜாதகத்தில் அதி வலுவுடன் காணப்படுகின்றதோ அந்த கிரகம் ஆளக்கூடிய இடத்தில் அமைந்துள்ள கல்லூரியை கவுன்சிலிங் போது தேர்வு செய்ய சொல்லலாம். அப்படி தேர்வு செய்து அங்கு படிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் வாயிலாக இயல்பான அளவை விட சற்று கூடுதலான நன்மையை ஜாதகர் பெற முடியும்.





#1. UNIQUE NUMBER FOR HOROSCOPE
இந்த மென்பொருளில் பதிவு செய்யப்படும் (கணிக்கப்படும்) ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பிரத்யேகமான எண் (Unique number) ஒன்று வழங்கப்படும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் மீண்டும் ஜோதிடரை தொடர்பு கொள்ளும் பொழுது அந்த குறிப்பு எண்ணை சொன்னாலே போதுமானது. அந்த ஜாதகத்தை எளிதாக மீண்டும் open செய்து விடலாம்.


#2. USER FRIENDLY SEARCH ENGINE
இந்த மென்பொருளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஜாதகத்தை open செய்வதற்கு அந்த ஜாதகத்தின் குறிப்பு எண் இருந்தால் போதுமானது என்று மேலே கூறி இருந்தேன். குறிப்பு எண் தவிர அந்த ஜாதகரின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், அந்த ஜாதகம் கணிக்கப்பட்ட தேதி இவற்றில் எதை கொண்டும் அந்த குறிப்பிட்ட ஜாதகத்தை எவ்வித சிரமும் இல்லாமல் மிக எளிதாக open செய்து விடலாம்.


#3. AUTO NUMBER
reference number, unique number, குறிப்பு எண் எல்லாம் ஒன்று தான்.

இந்த AUTO NUMBER வசதி என்பது குறிப்பு எண் தொடக்கத்தை ஜோதிடரின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது மென்பொருளில் எந்த ஒரு ஜாதகமும் இல்லாமல் நாம் புதிதாக ஒரு ஜாதகத்தை பதிவு செய்தோம் என்றால் அந்த ஜாதகத்தின் குறிப்பு எண் 1 என மென்பொருள் தானாகவே SET செய்து கொள்ளும். பின்னர் அடுத்து பதிவிடும் ஜாதகத்திற்கு குறிப்பு எண் 2 என தொடர்ந்து ALLOT செய்யும். அதன் பின்னர் குறிப்பு எண் 3....... 4.......... 5....... என தொடர்ச்சியாக வரும்..

{ எந்த ஒரு ஜாதகத்திற்கும் நாமாக ஒரு குறிப்பு எண்ணை SET செய்ய இயலாது. இது UNIQUE NUMBER INTERLOCKING க்காக அமைக்கப்பட்டுள்ளது. காரணம் நாமாக குறிப்பு எண் SET செய்யும் பொழுது ஒரே எண்ணை இரண்டு ஜாதகங்களுக்கு கொடுக்க நேரலாம். }

ஆனால் குறிப்பு எண்ணின் தொடக்கத்தை ஜோதிடர் தம் விருப்பத்திற்கு ஏற்ப AUTO NUMBER வசதியின் மூலம் மிகச் சுலபமாக அமைத்து கொள்ளலாம். AUTO NUMBER-ல் என்ன எண்ணை கொடுக்கின்றோமோ அந்த எண்ணிலிருந்து நாம் பதிவு செய்யும் ஜாதகங்களின் குறிப்பு எண் ஆரம்பமாகும். உதாரணத்திற்கு AUTO NUMBER-ல் 3000 என SET செய்தோம் என்றால் அதன் பின்னர் பதிவு செய்யப்படும் ஜாதகத்திற்கு குறிப்பு எண் 3001 என மென்பொருள் SET செய்து கொள்ளும்.. அதன் பின்னர் 3002....... 3003....... என்ற வரிசையில் தொடரும்.



#4. BACKUP AND RESTORE OPTION
மென்பொருளில் கணித்த ஜாதகங்களை பேக்கப் (backup) செய்து எந்நேரமும் அதை ரிஸ்டோர் (restore) செய்து கொள்ளும் வசதி.

அதாவது ஒரு சில நேரங்களில் நமது கணினி பழுதடையும் பொழுது நமது மென்பொருளும் செயலிழந்து (மறைந்து) போகும். பிறகு மீண்டும் மென்பொருளை Install செய்யும் பொழுது ஏற்கனவே கணித்த ஜாதகங்கள் அதில் இருக்காது. இந்த பிரச்சனையை தவிர்க்கவே மென்பொருளில் BACKUP AND RESTORE என்கிற ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக Back up செய்த file-ஐ RESTORE செய்வதன் மூலம் மென்பொருளில் மீண்டும் கணித்த ஜாதகங்களை மிக எளிதாக வரவழைக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில அன்பர்கள் தங்களது கணினி (PC) மற்றும் மடிக்கணினி (LAPTOP) ஆகிய இரண்டிலும் மென்பொருளை பயன்படுத்துவார்கள். மேற்சொன்ன Backup மற்றும் Restore வசதிகளை கொண்டு கணினியில் பதிவிட்ட ஜாதகங்களை மடிக்கணினியிலும், மடிக்கணினியில் பதிவிட்ட ஜாதகங்களை கணினியிலும் மிக எளிதாக மாற்றிக்கொள்ள (Transfer) முடியும்.
மேலும் Back up file-ஐ வெறும் Data base file ஆக மட்டுமல்லாமல் MS Excel file ஆகவும் வைத்து கொள்ள முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.



#5. SUBLORD, ASCENDANT, SIGN, STAR FILTER
எந்த கிரகத்தை தன் ஜாதகத்தில் லக்ன பாவ உபநட்சத்திர அதிபதியாக கொண்ட வாடிக்கையாளர்கள் ஜோதிடர்களாகிய நம்மிடம் அதிகமாக ஜாதக ஆலோசனை கேட்க வருகிறார்கள் என்பதை மிகச் சுலபமாக அறியும் வசதி.

உதாரணத்திற்கு சார ஜோதிட அன்பர் ஒருவரின் மென்பொருளில் சுமார் 100 வாடிக்கையாளர்களின் ஜாதகங்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த 100 வாடிக்கையாளர்களின் ஜாதகங்களில்.. 
புத பகவான் அந்த 100 ஜாதகங்களில் எத்தனை வாடிக்கையாளர்களின் ஜாதகங்களில் லக்ன உபநட்சத்திர அதிபதியாக வந்துள்ளார், குரு பகவான் எத்தனை ஜாதகங்களில் லக்ன உபநட்சத்திர அதிபதியாக வந்துள்ளார், சுக்கிர பகவான் எத்தனை ஜாதகங்களில் லக்ன உபநட்சத்திர அதிபதியாக வந்துள்ளார் என.... 9 கிரகங்களுக்கும் தனித்தனியே பார்க்கலாம்.
இந்த வசதி எதற்காக?? என அன்பர்களுக்கு ஒரு கேள்வி எழக் கூடும்.

உதாரணத்திற்கு.. 
Z என்ற ஜாதகத்தில் லக்ன பாவ உபநட்சத்திர அதிபதியாக புத பகவான் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த Z ஜாதகர் புத பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதால் புத பகவானை லக்ன பாவ உபநட்சத்திர அதிபதியாக கொண்ட ஜாதகர்களிடம் அல்லது புத பகவானை நடப்பு தசாநாதனாகவோ, புத்திநாதனாகவோ கொண்ட ஜாதகர்களை அதிகளவில் தொடர்பு கொள்வார்..

இதே போல் ராசி, நட்சத்திரம், லக்ன உபநட்சத்திர அதிபதி போன்றவற்றிர்க்கும் பார்க்க முடியும்.



#6. NOTES OPTION:
வாடிக்கையாளர்களின் விபரங்களை அந்த ஜாதகத்திலேயே குறிப்புகளாக சேமித்து (save) வைத்துக் கொள்ளும் வசதி. இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் அந்த ஜாதகரை பற்றியும், ஜோதிடர்களாகிய நாம் அந்த ஜாதகத்தில் பெற்ற அனுபவங்களை பற்றியும் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். ஜோதிட துறையில் ஆராய்ச்சி செய்யும் அன்பர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த Notes பக்கத்தை ஜாதகத்துடன் சேர்த்து பிரிண்ட் செய்ய முடியும் என்பதால் இந்த Notes பக்கத்தில் வாடிக்கையாளருக்கு நாம் கொடுக்கும் சில அறிவுரைகளை குறிப்பிடும் பொழுது அது ஜாதக நகலுடன் சேர்ந்து வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


#7. EXTRACTING HOROSCOPE IN PDF FORMAT (SOFT COPIES)
கணித்த ஜாதகத்தை சுருக்கமாக எனில் ஒரே பக்கத்திலும், விரிவாக எனில் சுமார் 116 பக்கங்கள் வரை மிக எளிதாக மல்டிகலரில் (PDF) வடிவில் A4 SIZE-ல் சேமித்து வைக்க முடியும். இதன் மூலமாக கணித்த ஜாதகத்தை Email, Whatsapp, Messenger, Google Drive போன்றவற்றின் மூலமாக உலகில் உள்ள எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் நொடியில் அனுப்பி வைக்க முடியும்.


#8. TAKING HARD COPIES (PRINT) OF HOROSCOPE
கணித்த ஜாதகத்தை PDF வடிவில் பிரிண்ட் (Print) எடுக்கும் வசதி. எழுத்து, கணக்கு ஆகியவை புத பகவானின் காரகங்கள். அது போல கணிணியும், மென்பொருள் துறையும் புத பகவானின் காரகங்களே. அதனால் பஞ்சாங்கம் பார்த்து கணக்கு போட்டு தான் ஜாதகம் கணிக்க முடியும் என்றில்லை. இது போன்ற மென்பொருளை பயன்படுத்தி ஜாதகத்தை ஒரு சில வினாடிகளில் கணித்து பிரண்ட் (print) எடுத்து விடலாம்.


#9. ASTROLOGER’S DETAILS WITH LOGO ON HOROSCOPE
ஜாதகத்தின் முகப்பு பக்கத்தின் மேலே ஜோதிடரின் முழு விபரங்களை சின்னத்துடன் (logo) வரவழைக்கும் வசதி. அதாவது ஜோதிடரின் பெயர், ஜோதிட மையத்தின் பெயர், அலுவலக விலாசம், ஜோதிடரின் அலைபேசி எண், ஜோதிடரின் முகநூல் ID, ஜோதிடரின் இணையதள முகவரி, போன்றவற்றை விருப்பமான COLOR, STYLE மற்றும் SIZE-ல் ஜாதகத்தின் முகப்பு பக்கத்தில் பதிவிடும் வசதி. இது வாடிக்கையாளர்கள் ஜோதிடர்களாகிய நம்மை மீண்டும் அடையாளம் காண (தொடர்பு கொள்ள) பெரும் உதவி புரியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


#10. DEFAULT PLACE..
ஒரு ஜாதகத்தை கணிக்க ஜோதிடர்களாகிய நமக்கு தேவைப்படுவது அந்த ஜாதகரின் பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய இம்மூன்றும் தான். இம்மூன்றில் பிறந்த நாள், பிறந்த நேரம் என்பது ஒரு ஜாதகருக்கு உள்ளது போல இன்னொரு ஜாதகருக்கு அமைவது மிகக் கடினம்.

ஆனால் ஒரே ஊரில் பிறந்த ஜாதகர்களை நாம் இயல்பாகவே சற்று அதிகமாக சந்திக்க நேரும்.

உதாரணத்திற்கு.. Z-என்கிற ஜோதிடர் திருச்சி மாநகரில் ஜோதிடத்தை முழு நேரத் தொழிலாகச் செய்து வருகிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.

அவர் ஜோதிடம் பார்க்கும் இடம் திருச்சி மாநகர் என்பதால் அவரிடம் இணையதள வாயிலாக (ONLINE CLIENT) அல்லாமல் நேரிடையாக (DIRECT CLIENT) வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் திருச்சி மாநகரில் பிறந்தவர்களாகவே இருக்கக் கூடும்.. மேற்கண்ட வாடிக்கையாளர்களுக்கு Z-என்கிற ஜோதிடரஜாதகம் கணிக்கும் பொழுது ஒவ்வொரு தடவையும் பிறந்த இடத்தில் திருச்சி என குறிப்பிட வேண்டி வரும்.

இதை தவிர்ப்பதற்காகவே மென்பொருளில் DEFAULT PLACE என்ற வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

DEFAULT PLACE-ல் நாம் திருச்சி என ஒரு முறை SET செய்து விட்டால், அதன் பின்னர் எந்த ஒரு ஜாதகம் கணிக்கும் பொழுதும் பிறந்த நேரம் திருச்சி என AUTOMATIC-க்காக வந்து விடும். அதன் பின்னர் தேவைப்பட்டால் நாம் வேறு ஊரை மாற்றிக் கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் லக்னம் என்பது இடத்திற்கு தகுந்தவாறு மாறக் கூடியது. ஆளும் கிரக நிலைகளில் உள்ள லக்ன நிலை என்பது ஜாதகர் பிறந்த நேரத்தின் சந்திரனின் நிலையை காட்டும் என்பது விதி. ஆதலால் ஆளும் கிரக நிலைகளை கணக்கீடு செய்வதற்கு ஜோதிடரின் இருப்பிடம் (OFFICE LOCATION) அவசியம். இந்த DEFAULT PLACE-ல் எந்த இடத்தை FIX செய்கின்றோமோ அந்த இடத்தையே மென்பொருள் ஆளும் கிரக நிலைகளை கணிக்க எடுத்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



#11. CLIENT HISTORY
ஒரு சில வாடிக்கையாளர்கள் ஜோதிடர்களை அடிக்கடி சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் ஜோதிடரை இதுவரை எத்தனை முறை சந்தித்துள்ளார், எப்பொழுது சந்தித்துள்ளார் என்பதை இந்த மென்பொருளில் HISTORY வசதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


#12. TRANSIT OF LAGNA & STAR
லக்னம் ஒரு ராசியில் அல்லது நட்சத்திரத்தில் நுழையும் நேரத்தை கண்டறியும் வசதி.

அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் லக்னம் என்பது ஒரு குறிப்பிட்ட ராசியில் எப்பொழுது நுழைகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். சுபமுஹுர்த்த நேரங்களை நிர்ணயிக்க இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஒரு குறிப்பிட்ட நாளில் லக்னம் என்பது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் எப்பொழுது நுழைகிறது என்பதனையும் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.



#13_SENSITIVE_POINT
ஒரு குறிப்பிட்ட டிகிரியை ஆளக்கூடிய கிரகங்கள் யாவை என்பதை கண்டுபிடிக்கும் வசதி.

அதாவது ஒரு குறிப்பிட்ட டிகிரியை குறிப்பிட்டால் அந்த டிகிரிக்கு சொந்தமான ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி, உபநட்சத்திர அதிபதி, உபஉபநட்சத்திர அதிபதி, உபஉபஉபநட்சத்திர அதிபதிகளை தெளிவாக காண்பிக்கும்.

உதாரணத்திற்கு.. 
170டிகிரி 20கலை 00விகலை என குறிப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்..

170 டிகிரி 20கலை என்பது கன்னி ராசியில், ஹஸ்தம் நட்சத்திரத்தில் வரும் என்பதை நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆக மேற்குறிப்பிட்ட பாகையை ஆளக்கூடிய ராசி அதிபதி மற்றும் நட்சத்திர அதிபதி முறையே புதன் மற்றும் சந்திரன் என்பதை அறிவோம்.

மேலும் அந்த டிகிரி எந்த உபநட்சத்திரத்தில், உபஉபநட்சத்திரத்தில், உபஉபஉபநட்சத்திரத்தில் வருகிறது என்பதை மென்பொருள் நொடியில் காண்பிக்கும்.

அதே போல் மேற்கண்ட 5 நிலைகளின் (sign, star, sub, SS, SSS) அதிபதிகளை குறிப்பிட்டாலும், அந்த கிரகங்கள் எந்த டிகிரியிலிருந்து எந்த டிகிரி வரை ஆள்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.



#14. GATHI/VIGATHI CALCULATOR
சூரிய உதயாதி நாழிகையை கொண்டு பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கும் வசதி. இன்றைய சூழலில் ஒரு குழந்தை பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாக குறித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சில ஜாதகங்களில் ஜோதிடர்கள் வெறும் சூரிய உதயாதி நாழிகையை மட்டும் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த மென்பொருளில் சூரிய உதயாதி நாழிகையை வைத்து பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.


#15_DATE_CALCULATOR:
ஒரு குறிப்பிட்ட தினத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தினம் வரை உள்ள மொத்த நாட்களை கணக்கீடு செய்யும் வசதி.

அதாவது 06/07/2016 இருந்து இன்று (06/07/2017) வரை எத்தனை நாட்கள் என்று ஒருவரிடம் கேட்டால் உடனடியாக ஒரு வருடம் கூறி விடுவார். ஆனால் 04/02/2006 இருந்து இன்று (06/07/2017) வரை எத்தனை நாட்கள் என்று அதே நபரிடம் கேட்டால் உடனே கூறுவது என்பது சற்று கடினமான விஷயம் ஆகும். சார ஜோதிட மென்பொருளில் DATE CALCULATOR வசதியின் மூலம் இது போன்றவைகளை மிகச் சுலபமாக நொடியில் அறியலாம்.

எதற்காக இந்த வசதி மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது என அன்பர்கள் இப்போது சிறுவனிடம் கேட்கக் கூடும். அவசியம் கூறுகிறேன்.

ஒரு சம்பவம் நடக்கும் என விதி என்கிற கொடுப்பினையில் குறிப்பிட்டு இருந்தாலும் அது எப்பொழுது நடக்கும் என தெரிவிப்பது மதி என்கிற தசாபுத்தியே ஆகும்.

மேற்சொன்ன தசாபுத்தியில் சில கணக்கீடு செய்வதற்கு இந்த DATE CALCULATOR வசதி பெரிதும் உதவி புரியும்.

அதாவது ஒரு ஜாதகருக்கு நடப்பு தசாநாதன் எத்தனை நாட்கள் தன் தசையை நடத்தி விட்டார், இன்னும் எத்தனை நாட்களை பாக்கி வைத்துள்ளார் என்பதை மிகத் துல்லியமாக இந்த DATE CALCULATOR வசதியின் மூலம் அறியலாம்.

அதே போல ஒரு குறிப்பிட்ட தசை, புத்தி, அந்தரம் தொடங்க அல்லது முடிய இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்பதனையும் அறியலாம். இந்த DATE CALCULATOR வசதியில் ADD, SUBTRACT, DIFFERENCE என மூன்று OPTION உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




kp astrology, kp astrology software, kp astrology software in tamil, kp astrology software tamil, kp astrology prediction software, best kp astrology software, kp astrology software for pc, kp astrology software for windows, latest kp astrology software, kp astrology software price, kp astrology software, professional kp astrology software, kp system software, kp astrology software with predictions, best astrology software, indian astrology software, top 10 astrology software, astrology software online shopping , astrology software online store , astrology software collection , astrology course software , astrology software for sale , astrology software list , ஜோதிட மென்பொருள் , சார ஜோதிட மென்பொருள் , KP ஜோதிட மென்பொருள் , ஜோதிட சாப்ட்வேர் , சார ஜோதிட சாப்ட்வேர் , KP ஜோதிட சாப்ட்வேர் , ஜோதிட மென்பொருள் , சார ஜோதிட மென்பொருள் , ஜோதிட சாப்ட்வேர் , சார ஜோதிட சாப்ட்வேர் , தமிழ் ஜோதிட மென்பொருள், ஜோதிட மென்பொருள் வாங்க, சார ஜோதிட மென்பொருள் வாங்க, 









Comments

  1. Complete Life Prediction - Complete life horoscope delivers an extensive astrological overview of an individual's life, using their birth chart. It includes predictions and insights into career, relationships, health, and personal growth. This detailed guide helps in understanding potential challenges and opportunities, providing a map for making informed life decisions. Visit: 12horoscopesigns.com

    ReplyDelete

Post a Comment